ADDED : ஜூன் 16, 2026 06:24 AM

பெங்களூரு: தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவில் மீது அவதுாறு பரப்பப்பட்டது குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டுமென, முதல்வர் சிவகுமாருக்கு பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
க டிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவில் என்பது ஒரு சாதாரண வழிபாட்டு தலம் மட்டுமல்ல. இது கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவில் நிர்வாகம் பல தரப்பினருக்கும் உதவி செய்து வருகிறது. அப்படிப்பட்ட கோவில் நிர்வாகத்தின் மீது வேண்டும் என்றே அவதுாறு பரப்பப்பட்டு வருகிறது. இதை பக்தர்களும் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர்.
தர்மஸ்தலா மீது அவதுாறு பரப்புவதற்காக 200 கோடி ரூபாயில் சதித்திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கின்றனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது.
இவ்விவகாரத்தில் போலீசா ரின் விசாரணை மட்டும் போதாது; சி.பி.ஐ., விசாரணை வேண்டும்; உண்மை வெளிவர வேண்டும். சதித்திட்டம் தீட்டியவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இவ்விவகா ரத்தில் சி.பி.ஐ., விசாரிக்க முதல்வர் சிவகுமார் வழிவகை செய்ய வேண்டும்.
சமூக வலைதளங்களில் ஹிந்து கோவில்கள், ஆசிரமங்கள் மீது வேண்டுமென பழி சுமத்தப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள நபர்களின் முகத்திரை விரைவில் கிழிக்கப்படும். தர்மஸ்தலா விவகாரத்தில் சமீபத்தில் காங்கிரஸ் அரசு எடுத்துள்ள நடவடிக்கை கவலையை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
