Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வனவிலங்குகளை கொல்வோர் மீது கடும் நடவடிக்கை; முதல்வர் உத்தரவு

வனவிலங்குகளை கொல்வோர் மீது கடும் நடவடிக்கை; முதல்வர் உத்தரவு

வனவிலங்குகளை கொல்வோர் மீது கடும் நடவடிக்கை; முதல்வர் உத்தரவு

வனவிலங்குகளை கொல்வோர் மீது கடும் நடவடிக்கை; முதல்வர் உத்தரவு

ADDED : அக் 09, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : வனவிலங்குகளை கொல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, வனத்துறையினருக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

வனத்துறை சார்பில், 71வது வனவிலங்கு வார நிறைவு விழா பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது. முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார். வனம் தொடர்பாக கட்டுரை எழுதிய மாணவ - மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

பின், அவர் பேசியதாவது:

வன வளங்களையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பது, ஒவ்வொரு வன அதிகாரிகள், ஊழியர்கள் கடமை. சமீப காலமாக புலிகள் விஷம் வைத்து கொல்லப்படும் சம்பவம் கவலை அளிக்கிறது. தங்கள் கடமையை அதிகாரிகள் பொறுப்புடன் செய்ய வேண்டும். வனவிலங்குகளை கொல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனிதர் - வன விலங்கு சுகவாழ்வை ஊக்குவிக்கும் விதமாக வனவிலங்கு வாரம் கொண்டாடப்படுகிறது. வனச்சூழல் ஆரோக்கியமாக இருந்தால் தான், மனித சூழல் நன்றாக இருக்கும். காடுகளின் உயிர் வாழ்வு தான், பூமியின் உயிர் வாழ்வு என்பதை மறந்து விட கூடாது.

யானைகள், புலிகள் எண்ணிக்கையில் நமது மாநிலம் முதல், இரண்டாம் இடத்தில் உள்ளது. இது பெருமையான விஷயம். வனவிலங்குகள் வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருவதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி, அறிவியல் ரீதியாக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, கர்நாடக அரசின் வன பாதுகாப்பு துாதரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us