ADDED : அக் 11, 2025 11:00 PM

அரசியலில் ஆர்வம்
மு தல்வர் சித்தராமையாவின் ரசிகரை மயமாக கொண்டு, கனகராஜா என்ற திரைப்படம் தயாராகிறது. இதில் காங்., முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகன் அனுாப், முதல்வரின் ரசிகர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக,
நடிகை நிமிஷா நடிக்கிறார். படத்தின் நாயகன், அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுகிறார். இதற்காக என்னென்ன செய்கிறார் என்பதே கதையாகும். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என, ஊக்கப்படுத்தும் கதை கொண்டது. பெங்களூரு, மங்களூரு, மடிகேரி சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கும். வெளி மாநிலம், நாடுகளில் படப்பிடிப்பு நடத்தவும் படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர்.


