/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மர்ம பொருள் வெடித்து தம்பதி படுகாயம் மர்ம பொருள் வெடித்து தம்பதி படுகாயம்
மர்ம பொருள் வெடித்து தம்பதி படுகாயம்
மர்ம பொருள் வெடித்து தம்பதி படுகாயம்
மர்ம பொருள் வெடித்து தம்பதி படுகாயம்
ADDED : அக் 01, 2025 12:01 AM
ஹாசன் : ஹாசன் மாவட்டம், ஆலுார் தாலுகா ஹலே ஆலுரு கிராமத்தை சேர்ந்தவர் சுதர்ஷன், 32. இவரது மனைவி காவியா, 28. தம்பதி இருவரும் ஆலுரு கிராமத்திலே வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டிற்குள் சென்று பார்த்ததும், கணவன், மனைவி இருவரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு ஹாசன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த ஆலுார் போலீசார், வீட்டை சோதனை செய்தனர்.
காஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை என்பதை போலீசார் கண்டறிந்தனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து நேற்று மாவட்ட எஸ்.பி., முகமது சுஜீத்தா கூறியதாவது:
மர்ம பொருள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வீட்டில் உள்ள ஆதாரங்களை தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகள் சேகரித்து சென்று உள்ளனர். போலீசாரும் விசாரிக்கின்றனர். வெடித்தது என்னவென்று விரைவில் தெரிய வரும்.
விபத்து வீட்டின் பின்பகுதியில் நடந்துள்ளது. கணவன், மனைவி ஆகிய இருவர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை தவிர வீட்டில் இருந்த மற்றவர்கள் பாதிக்கப்படவில்லை. காயமடைந்த இருவரும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இருவரின் உடல்நிலையும் மிக மோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


