Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

ADDED : ஜூலை 01, 2025 03:46 AM


Google News
பெங்களூரு, மஹாலட்சுமி லே - அவுட்டின், பசவேஸ்வரா பள்ளி அருகில், நேற்று முன் தினம் நள்ளிரவு, சில நபர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்திக் கொண்டு, மது விருந்து நடத்தி பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அப்பகுதியினர் புகார் அளித்துள்ளனர்.

பெங்களூரின் தொட்ட நாகமங்களாவில் வசித்த விக்னேஷ், 32, வாட்டர் கேன்கள் சப்ளை செய்யும் பணி செய்தார். இவர் நேற்று அதிகாலை கோனப்பன அக்ரஹாரா சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியின், கோகரே கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 38. இவர் பைனான்ஸ் நிறுவனத்தில், ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஜூன் மாதம், கடன் தவணையை கட்ட முடியாததால், வீட்டை ஜப்தி செய்வதாக, பைனான்சில் இருந்து நோட்டீஸ் வந்தது. மனம் நொந்த சுப்ரமணி, விஷம் குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

ராம்நகர், கனகபுராவின், திம்மசந்திரா அருகில், நேற்று அதிகாலை சென்ற பைக் மீது, கார் மோதியது. பைக்கில் சென்ற நயாஜ் பாஷா, 42, அவரது நண்பர் பைரோஜ், 38, ஆகியோர் உயிரிழந்தனர்.

யாத்கிர், ஷஹாபுராவின், தேஷ்முக் லே - அவுட்டில் வசிப்பவர் முகமது ஆரிப். இவரது வீட்டில் நடப்பாண்டு ஜனவரி 17ம் தேதி, 50,000 ரூபாயும், வாகன ஆவணங்களும் திருடுபோயின. விசாரணை நடத்திய போலீசார், சையத் ஷமுதீன், 35, என்பவரை கைது செய்தனர். ஷஹாபுரா ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவரது குற்றம் உறுதியானதால், இவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஷோபா, நேற்று தீர்ப்பளித்தார்.

4 ஆண்டு சிறை







      Our Apps Available On




      Dinamalar

      Follow us