Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

ADDED : அக் 13, 2025 03:42 AM


Google News
விபத்தில் ஒருவர் பலி

பெங்களூரின் காக்ஸ் டவுன் ஐந்தாவது கிராசில் வசித்தவர் கிறிஸ்டோபர் விஜய், 30. இவர் நேற்று அதிகாலை ஆர்.டி.நகரின், டி.வி., டவர் அருகில் பைக்கில் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்து பைக் மரத்தில் மோதியது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தார்.

செயின் பறித்தவர் கைது

பெங்களூரின் மாருகொண்டனஹள்ளியின், ஏரி அருகில் செப்டம்பர் 12ம் தேதி காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்செயினை, பைக்கில் வந்த நபர் பறித்து சென்றார். இது குறித்து, பெண்ணின் புகாரின்படி விசாரணை நடத்திய ஹெப்பகோடி போலீசார், நிதின், 29, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச்செயினை மீட்டனர்.

போலி தங்கச்செயின் மோசடி

தட்சிணகன்னடா, மங்களூரின் காபூரில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் போலி தங்கச்செயினை அடமானம் வைத்து, 26.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை நடத்திய காபூர் போலீசார் ஆரிப் அபூபக்கர், 39, முகமது ஆஷிக் கட்டத்தார், 34, அப்துல் அமீஜ், 35, ஆகியோரை கைது செய்தனர்.

ஓடையில் சிறுவன் மாயம்?

கோலார் நகரின் விட்டப்பனஹள்ளி வசிக்கும் ராஜண்ணா மகன் ஸ்நேஹித் கவுடா, 14. இவர் மூன்று நாட்களுக்கு முன், வாழைத்தண்டு வாங்கி வர, சைக்கிளில் கடைக்கு சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. தோட்டம் அருகில் அவரது சைக்கிள் உள்ளது; சிறுவனை காணவில்லை. போலீஸ் நிலையத்தில், பெற்றோர் புகார் செய்துள்ளனர். தோட்டம் அருகில் ஓடை பாய்ந்தோடுகிறது. இதில் சிறுவன் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us