sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : மே 11, 2026 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 11:19 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விபத்தில் 2 பேர் பலி

மாலுாரின் சீத்தப்பன ஹள்ளி அருகே இருசக்கர வாகனமும், லாரியும் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

அப்பேனஹள்ளியை சேர்ந்த மொட்டப்பா, 65, நாகந்த ஹள்ளியை சேர்ந்த மல்லப்பா, 60, ஆகியோர் நேற்று முன்தினம் மாலுாரின் தோரணஹள்ளி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தோரணஹள்ளியில் இருந்து வந்த ஒரு லாரி, சீத்தப்பனஹள்ளி நுழைவாயில் அருகே வரும்போது,

இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதனால், இரு சக்கர வாகனத்தில் பயணித்த மொட்டப்பா, ெல்லப்பா ஆகியோர் பலியாயினர். லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்று தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குடிபோதையில் தாக்குதல்

பங்கார்பேட்டை, தாலுகாவின் கீலுகொப்பா கிராமத்தில் உள்ள ஒரு மதுபான கடையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திக் கொண்டிருந்த போது, தொடங்கிய கை கலப்பு, வன்முறையாக மாறியது.

கீலுகொப்பாவை சேர்ந்த எஸ்வந்த், 40, ஆகாஷ், 37, மகேஷ், 42, பிரசாந்த், 35, ஆகியோர் அதே கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், 23, சந்திரப்பா, 60, வேணு, 23, ரோஹித், 17, ஆகியோருடன் குடிபோதையில் தகராறு செய்து அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த நான்கு பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ராஜசேகர், சந்திரப்பா, வேணு, ரோஹித் ஆகியோரை போலீசார் கைது செய்து, கொலை முயற்சி வழக்காக பதிவு செய்துள்ளனர்.

சாலை விபத்து ஒருவர் பலி

சீனிவாசபுராவில் உள்ள முல்பாகல் பிரதான சாலையில், ஹொகலகெரே கிராஸ் அருகே, இருசக்கர வாகனத்தில்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தேவபாஸ், 34, என்பவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக சீனிவாஸ்புரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவபாஸ், சீனிவாசப்பூரின் கேபகானஹள்ளியில், சில மாதங்களாக சிமென்ட் செங்கல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர் என தெரிய வந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us