Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குடிபோதையில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை

குடிபோதையில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை

குடிபோதையில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை


ADDED : ஆக 09, 2025 04:46 AM

Follow on Google

ADDED : ஆக 09, 2025 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹாவேரி: உருட்டுக்கட்டையால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர், ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஹாவேரி நகரின், நஜீகலகமாபுரா கிராமத்தில் வசித்தவர் சித்தப்பா தப்பண்ணவரா, 66. இவரது மனைவி லலிதவ்வா, 55. தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான சித்தப்பா, தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்வார்.

அதே போன்று, நேற்று முன் தினம் இரவு 10:00 மணியளவில், குடிபோதையில் வீட்டுக்கு வந்த சித்தப்பா, லலிதவ்வாவை திட்டி, தகராறு செய்தார். தாக்கவும் செய்தார்.

தடுக்க வந்த மகன், மகள்களை அறையில் தள்ளிப் பூட்டினார். அதன்பின் உருட்டுக்கட்டையால் மனைவியின் தலையில் சரமாரியாக அடித்ததில், சம்பவ இடத்திலேயே லலிதவ்வா உயிரிழந்தார்.

மனைவி இறந்ததால், கிலியடைந்த கணவர் வீட்டை விட்டு வெளியேறினார். அங்கும், மிங்கும் அலைந்துவிட்டு நேற்று அதிகாலை கிராமத்தின் புறநகரில் உள்ள ஏரியில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.

அறையில் பூட்டப்பட்டிருந்த மகனும், மகள்களும் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் விடுவிக்கப்பட்டனர். தாய் கொலையானது குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கிராமத்துக்கு வந்த ஹாவேரி ஊரக போலீசார், லலிதவ்வாவின் உடலை கைப்பற்றினர். கொலையாளியை தேடிய போது, ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap