Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சம்பளம் வழங்காததால் முதியவர் தற்கொலை; பி.டி.ஓ., 'சஸ்பெண்ட்'

சம்பளம் வழங்காததால் முதியவர் தற்கொலை; பி.டி.ஓ., 'சஸ்பெண்ட்'

சம்பளம் வழங்காததால் முதியவர் தற்கொலை; பி.டி.ஓ., 'சஸ்பெண்ட்'

சம்பளம் வழங்காததால் முதியவர் தற்கொலை; பி.டி.ஓ., 'சஸ்பெண்ட்'

ADDED : அக் 18, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
சாம்ராஜ்நகர்: தொடர்ந்து 27 மாதங்களாக சம்பளம் வழங்காததால் 65 வயது தொழிலாளி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான பி.டி.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹொங்கனுார் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தண்ணீர் திறந்துவிடும் வேலை செய்து வந்தவர் சிக்குசநாயகம், 65. இதே கிராமத்தை சேர்ந்த இவருக்கு கடந்த 27 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து பல முறை கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி ராமகவுடா, பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டு உள்ளார். இருப்பினும், சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அவர் விரக்தி அடைந்தார்.

நேற்று காலையில், சிக்குசநாயகம், ஹொங்கனுார் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த சாம்ராஜ்நகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை துவக்கினர். தன் மரணத்திற்கு பி.டி.ஓ., ராமகவுடாவே காரணம் என சிக்குசநாயகம் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது.

சிக்குசநாயகம் மரணத்திற்கு காரணமான, பணியில் அலட்சியமாக செயல்பட்ட பி.டி.ஓ., ராமகவுடாவை 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி மோனா ரோத் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us