/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஓட்டம் பிடித்த காதல் ஜோடி வாலிபரின் தாயை கொல்ல முயற்சி ஓட்டம் பிடித்த காதல் ஜோடி வாலிபரின் தாயை கொல்ல முயற்சி
ஓட்டம் பிடித்த காதல் ஜோடி வாலிபரின் தாயை கொல்ல முயற்சி
ஓட்டம் பிடித்த காதல் ஜோடி வாலிபரின் தாயை கொல்ல முயற்சி
ஓட்டம் பிடித்த காதல் ஜோடி வாலிபரின் தாயை கொல்ல முயற்சி
ADDED : அக் 12, 2025 10:15 PM
சிக்கபல்லாபூர் : தங்கள் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபரின் தாயை, பெண்ணின் குடும்பத்தினர் தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்தனர். இது குறித்து, புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகாவின், சங்கடபள்ளி கிராமத்தில் வசிப்பவர் அம்பரிஷ், 25. இவரும், அதே பகுதியில் வசிக்கும் பிரதிபா, 22, என்ற இளம்பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை காதலர்கள் பொருட்படுத்தவில்லை.
பெற்றோர் தங்களுக்கு திருமணம் செய்யமாட்டார்கள் என்பதை அறிந்த காதலர்கள், அக்டோபர் 6ம் தேதியன்று, கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் கோபத்தில் கொதித்த பிரதிபாவின் தந்தை பைரெட்டியும், அவரது குடும்பத்தினரும், அம்பரிஷின் வீட்டுக்குள் புகுந்து, தகராறு செய்தனர்.
அவரது தாயார் பய்யம்மா, 48, மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். பலத்த காயங்களுடன் அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இது குறித்து, அம்பரிஷ் குடும்பத்தினர், சம்பவத்தன்றே பாதபாளையா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. விசாரணையும் நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


