Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வெள்ள பாதிப்புகளுக்கு உதவி பிரதமருக்கு எத்னால் கடிதம்

வெள்ள பாதிப்புகளுக்கு உதவி பிரதமருக்கு எத்னால் கடிதம்

வெள்ள பாதிப்புகளுக்கு உதவி பிரதமருக்கு எத்னால் கடிதம்

வெள்ள பாதிப்புகளுக்கு உதவி பிரதமருக்கு எத்னால் கடிதம்

ADDED : அக் 09, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : 'கர்நாடகாவின் வட மாவட்டங்களில், கடுமையான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, எத்னால் எழுதிய கடிதம்:

கர்நாடகாவின் வட மாவட்டங்கள், வெள்ளத்தால் தத்தளிக்கின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள், வீடு, உணவு, அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவிக்கின்றன.

கட்டிசங்காவி அருகில் பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், தேசிய நெடுஞ்சாலை 50ல், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகள் தாமதமாகின்றன.

வெள்ள அபாயத்தில் சிக்கியவர்களை மீட்க, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இடைவிடாது பணியாற்றுகின்றனர். வெள்ளச்சேதம் அதிகமாக இருப்பதால், மத்திய அரசு உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

வெள்ள சூழ்நிலையை சமாளிப்பதில், மாநில காங்., அரசு தோல்வி அடைந்துள்ளது.

நிவாரண பணிகளை விட, அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். அவசர நிவாரண பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழுவை, கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தினர், விவசாயிகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.

பீமா ஆற்றங்கரை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் 20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில், பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மஹாராஷ்டிரா அணைகளில் இருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடுவதால், கலபுரகி, யாத்கிர், விஜயபுரா, பீதர் மாவட்டங்களில் பல பகுதிகளில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. பீமா, மாஞ்ச்ரா ஆறுகளின் வெள்ளத்தால் சூழ்நிலை மேலும் மோசமாகியுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us