Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு செயின்ட் ஜோசப் பல்கலையில் 2வது ஆண்டு பட்டமளிப்பு விழா உற்சாகம்

பெங்களூரு செயின்ட் ஜோசப் பல்கலையில் 2வது ஆண்டு பட்டமளிப்பு விழா உற்சாகம்

பெங்களூரு செயின்ட் ஜோசப் பல்கலையில் 2வது ஆண்டு பட்டமளிப்பு விழா உற்சாகம்

பெங்களூரு செயின்ட் ஜோசப் பல்கலையில் 2வது ஆண்டு பட்டமளிப்பு விழா உற்சாகம்

ADDED : செப் 29, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : பெங்களூரு செயின்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

பெங்களூரு லால்பாக் சாலையில், செயின்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தின் 2வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கவர்னர் தாவர்சந்த் கெலாட், உயர் கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர், திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் நரசிம்மமூர்த்தி, பல்கலைக்கழக வேந்தர் டயோனிசியல் வாஸ், துணைவேந்தர் விக்டர் லோபோ, தேர்வு கட்டுப்பாட்டாளர் காட்வின் டிசோசா, பல்கலைக்கழக பதிவாளர் சையது வாஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், 2,009 இளங்கலை பட்டதாரிகள்; 738 முதுகலை பட்டதாரிகள் என 2,747 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவர்களில் 99 இளங்கலை மாணவர்கள், 44 முதுகலை மாணவர்கள் என 143 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்.

இவர்களுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. என்.சி.சி., விளையாட்டு மற்றும் இணை பாடத்திட்டங்களில் சிறந்து விளங்கிய 40 பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசுகையில், ''பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். பல்கலைக் கழகங்கள் தொழில் முறை கல்வியை ஊக்குவிக்க வேண்டும். நாட்டை கட்டியெழுப்ப மாணவர்கள், தங்கள் அறிவு திறனை பயன்படுத்த வேண்டும். மனித நேயத்தையும், சேவை மனப்பான்மையையும் மாணவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் வழங்க வேண்டும்,'' என்றார். நரசிம்மமூர்த்தி பேசுகையில், ''வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மாணவர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். பசுமை ஆற்றல், கழிவு மேலாண்மை, சுகாதாரம், சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவில் உள்ள சவால்களை ஏற்க, மாணவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்,'' என்றார்.

பட்டம் பெற்றவர்களில் தமிழ் வழியில் படித்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர். தமிழ் பேராசிரியை சரளா ஆறுமுகம் மாணவர்களுக்கு வழிகாட்டியதுடன் ஊடகம், உணவு வழங்கல் பொறுப்புக்கு ஒருங்கிணைத்தார்.

பல்க லைக் கழகத்தில் கடந்த 1882ம் ஆண்டில் இருந்து தமிழ் வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பி டத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us