ADDED : ஜூன் 13, 2026 10:51 PM
பாகல்கோட்: தன் நிலத்துக்கு நிவாரணம் வழங்காமல் இழுத்தடித்த, பி.டி.டி.ஏ., எனும் பாகல்கோட் மேம்பாட்டு வாரிய அலுவலக ஊழியரை, விவசாயி செருப்பால் அடித்தார்.
பாகல்கோட் நகரின் நவநகரில் துப்புரவு பணியாளர்களுக்காக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதை பயனாளிகளுக்கு வழங்காமல், காலம் கடத்தியதால் தலித் அமைப்பினர் அதிருப்தி அடைந்தனர்.
வீடுகள் கட்டி ஓரண்டாகியும், துப்புரவு பணியாளர்களுக்கு வீடுகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இதை கண்டித்து பி.டி.டி.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, நேற்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த விவசாயி பசப்பா தொட்டமனி என்பவர், ''நீர் பாசன திட்டத்தால் என் நிலம் மூழ்கி, நான்கு ஆண்டுகளாகின்றன. இதுவரை எனக்கு பி.டி.டி.ஏ., அதிகாரிகள் நிவாரணம் வழங்கவில்லை. நிவாரணம் கேட்டு அலுவலகத்துக்கு அலைந்து சோர்ந்து விட்டேன்,'' என்றார்.
அப்போது, அலுவலகத்தில் இருந்த பி.டி.டி.எஸ்., மூத்த உதவியாளரும், டைப்பிஸ்டாக பணியாற்றும் நீலகண்ட அங்கத்துக்கும், விவசாயிக்கும் இடையே, கடுமையான வாக்குவாதம் நடந்தது.
ஒ ரு கட்டத்தில் கோபமடைந்த விவசாயி, அனைவரின் முன்னிலையில், அலுவலக ஊழியரை செருப்பால் அடித்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. நவநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள் ளது.
