Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகளின் ஆபாச வீடியோ வெளியிட்ட காங்., பிரமுகர் மீது தந்தை புகார்

மகளின் ஆபாச வீடியோ வெளியிட்ட காங்., பிரமுகர் மீது தந்தை புகார்

மகளின் ஆபாச வீடியோ வெளியிட்ட காங்., பிரமுகர் மீது தந்தை புகார்

மகளின் ஆபாச வீடியோ வெளியிட்ட காங்., பிரமுகர் மீது தந்தை புகார்

ADDED : அக் 18, 2025 11:13 PM


Google News
மைசூரு: தன் மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டதாக கே.ஆர்.நகரின் காங்கிரஸ் பிரமுகர் மீது, இளம்பெண்ணின் தந்தை, சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

மைசூரு மாவட்டம், கே.ஆர்.நகர் தாலுகாவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் லோஹித் சதாசிவப்பா மீது சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில், ஒருவர் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியுள்ளதாவது:

நான் விவசாயம் செய்து, வாழ்க்கை நடத்துகிறேன். எனக்கு இரண்டு மகள்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு, ஹொளேநரசிபுராவின், மரஹள்ளி கிராமத்தில் வசிக்கும் இளைஞருக்கு, என் மகளை திருமணம் செய்து கொடுத்தேன். மகளும், மருமகனும் அன்யோன்யமாக வாழ்கின்றனர்.

தீபாவளி பண்டிகைக்காக, என் மகள், எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார். 16ம் தேதி, காலை 10:00 மணியளவில் நான் வயலில் இருந்தபோது, என் உறவினர் வந்தார். அவர் என்னிடம், 'உன் மகளும், லோஹித் சதாசிவப்பாவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ, மல்லிகார்ஜுன் என்பவரின் 'வாட்ஸாப்' எண்ணுக்கு வந்துள்ளது. அதை என் 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்பினார். அது, உன் மகள், லோஹித் சதாசிவப்பாவுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ என்பது தெரிந்தது. உடனடியாக அழித்துவிட்டேன். இது பற்றி விசாரி' என்றார்.

எங்களுக்கும், காங்கிரஸ் பிரமுகர் லோஹித் சதாசிவப்பாவுக்கும், நிலத்தின் வாய்க்கால் வரப்பு தொடர்பாக, அவ்வப்போது வாக்குவாதம் நடந்தது. 'உன் குடும்பத்தை என்ன செய்கிறேன் பார்' என, என்னை பலமுறை மிரட்டியுள்ளார்.

எங்கள் குடும்பத்தின் மானம், மரியாதையை சீர்குலைக்கும் நோக்கில், என் மகளின் ஆபாச வீடியோவை அனைவரின் 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்பியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தன் மீது வழக்கு பதிவானதும் லோஹித் சதாசிவப்பா தலைமறைவாகிவிட்டார். இவர் கே.ஆர்.நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிசங்கரின் ஆதரவாளர் என கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us