Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இளைஞருக்கு உதவிய பெண் ஆட்டோ ஓட்டுநர்

இளைஞருக்கு உதவிய பெண் ஆட்டோ ஓட்டுநர்

இளைஞருக்கு உதவிய பெண் ஆட்டோ ஓட்டுநர்

இளைஞருக்கு உதவிய பெண் ஆட்டோ ஓட்டுநர்

ADDED : அக் 20, 2025 06:54 AM


Google News
பெங்களூரு: நள்ளிரவில் ஆட்டோ கிடைக்காமல், பரிதவித்த இளைஞருக்கு உதவிய பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து உள்ளது.

இது குறித்து, சமூக வலைதளத்தில் வருண் அகர்வால் என்ற இளைஞர் தனது 'எக்ஸ்' வலை தளத்தில் கூறியதாவது:

சில நாட்களுக்கு முன், பணி நிமித்தமாக இந்திரா நகருக்கு வந்தேன். அன்று நள்ளிரவு, கோரமங்களாவில் உள்ள என் வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. வாடகை வாகனங்கள் கிடைக்கவில்லை.

ஒரு கி.மீ., நடந்து வந்தேன். அப்போது சாலை ஓரத்தில் ஆட்டோவுடன் நின்றிருந்த ஒரு பெண் ஓட்டுநரிடம் விஷயத்தை கூறினேன். முதலில் மறுத்தார்; பின் மனம் மாறி, என்னை ஆட்டோவில் அழைத்து சென்று, கோரமங்களாவில் இறக்கி விட்டார். அவருக்கு, என் நன்றிகள். செயலி அடிப்படையிலான ஆட்டோக்களுக்கு 300 ரூபாய் வாடகை ஆகும். ஆனால் 200 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டார். பெங்களூரு போன்ற நகரங்களில், மகளிர் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக எண்ணிக்கையில் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us