/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எப்.கே.சி.சி.ஐ.,க்கு பெண் தலைவர் 106 ஆண்டு வரலாற்றில் முதன் முறை எப்.கே.சி.சி.ஐ.,க்கு பெண் தலைவர் 106 ஆண்டு வரலாற்றில் முதன் முறை
எப்.கே.சி.சி.ஐ.,க்கு பெண் தலைவர் 106 ஆண்டு வரலாற்றில் முதன் முறை
எப்.கே.சி.சி.ஐ.,க்கு பெண் தலைவர் 106 ஆண்டு வரலாற்றில் முதன் முறை
எப்.கே.சி.சி.ஐ.,க்கு பெண் தலைவர் 106 ஆண்டு வரலாற்றில் முதன் முறை
ADDED : அக் 02, 2025 11:06 PM

பெங்களூரு: நுாற்றாண்டுகளுக்கு முன், விஸ்வேஸ்வரய்யாவால் அமைக்கப்பட்ட எப்.கே.சி.சி.ஐ., எனும் கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவராக, முதன் முறையாக பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, எப்.கே.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கை:
கடந்த 1916ல் சர். விஸ்வேஸ்வரய்யா, எப்.கே.சி.சி.ஐ., அமைப்பை உருவாக்கினார். இதுவரை ஆண்கள் மட்டுமே, தலைவராக பொறுப்பேற்று, எப்.கே.சி.சி.ஐ., அமைப்பை வழிநடத்தி சென்றனர். பெண்கள் இப்பொறுப்புக்கு வந்தது இல்லை. இப்போது முதன் முறையாக, எப்.கே.சி.சி.ஐ., தலைவராக உமா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 108 ஆண்டு கால வரலாற்றில், இப்பதவிக்கு வந்த முதல் பெண் என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது. இவர் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அனுபவம் உள்ளவர்.
எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பதில் பிரசித்தி பெற்றுள்ள, 'மெசர்ஸ் ஹைடெக் மேக்னடிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார்.
இத்துறையில், 30 ஆண்டுளுக்கு மேலான அனுபவம் உள்ளவர். மகளிர் தொழிலதிபர்கள், நடுத்தர, சிறிய, மிகச்சிறிய தொழிலதிபர்களின் வளர்ச்சிக்கு, உமா ரெட்டி உறுதுணையாக நிற்பார். மகளிர் தொழிலதிபர்களுக்கு வழி காட்டுவார். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பார். துறையில் பல மாற்றங்களை கொண்டு வருவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


