Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் முதன் முறையாக குழந்தைகளுக்காக நாளை தினமலரின் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி

பெங்களூரில் முதன் முறையாக குழந்தைகளுக்காக நாளை தினமலரின் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி

பெங்களூரில் முதன் முறையாக குழந்தைகளுக்காக நாளை தினமலரின் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி

பெங்களூரில் முதன் முறையாக குழந்தைகளுக்காக நாளை தினமலரின் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி

ADDED : அக் 01, 2025 12:07 AM


Google News
சிவாஜி நகர் : 'தினமலர்' சார்பில் பெங்களூரில் முதன் முறையாக, 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்' என்ற குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் நிகழ்ச்சி, நாளை கோலாகலமாக நடக்கிறது.

இதில் தங்கள் குழந்தைகளை பங்கேற்க விரும்பும் பெற்றோர் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

நெல் மணியில், குழந்தையின் கையால் அகரம் எழுதி, வித்யாரம்பம் செய்வது, விஜயதசமி நன்னாளில் தான். இந்த நாளில், நம் நாளிதழ் சார்பில், 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதில், அரசு உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பல்துறை வல்லுநர்கள், கலை ஞர்கள் பங்கேற்று, குழந்தைகளின் 'அ'கரத்தை துவக்கி வைக்க உள்ளனர்.

பெங்களூரு சிவாஜி நகரின் திம்மையா சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் வளாகத்தில் நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்க உள்ளது.

நிகழ்ச்சியில், உங்கள் வீட்டில் உள்ள இரண்டரை வயது முதல் மூன்றரை வயது உள்ள குழந்தைகளை அழைத்து வந்து, 'வித்யாரம்பம்' துவக்கலாம். இதற்கான முன்பதிவு கடந்த 14ம் தேதி துவங்கியது.

பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தங்கள் குழந்தைகளின் விபரங்களுடன் ஆர்வத்துடன், பெற்றோர் முன்பதிவு செய்து உள்ளனர். நாளை நிகழ்ச்சி நடப்பதால், இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்.

குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், வயது, முகவரி, 'வாட்ஸாப்' எண் ஆகிய விபரங்களை 77600 51446 என்ற 'வாட்ஸாப்' எண்ணில் தெரிவித்து, முன்பதிவு செய்ய வேண்டும்.

பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள, 'லேர்னிங் கிட்' மற்றும் குழந்தை அரிச்சுவடி எழுதும் புகைப்படத்துடன் கூடிய தினமலர் சான்றிதழ் வழங்கப்படும். அனுமதி இலவசம்.

ெங்களூரில் முதன் முறையாக நடக்கிறது. ஆரம்ப நாளிலிருந்து பலரும் ஆர்வமுடன் முன் பதிவு செய்தனர். பெங்களூரில் தமிழர்களு க்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளதே என பலரும் மனதார பாராட்டினர்.

மேலும் விபரங்களுக்கு 89715 09091 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சிறப்பு விருந்தினர்கள்

நாளை நடக்கும் நிகழ்ச்சியில், மூத்த தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், பல்வேறு விருதுகளை பெற்றவர்களான பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர் எஸ்.ஏ.சுப்பிரமணியன், ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக நர்சிங் கல்வி முன்னாள் இயக்குநர் கஸ்துாரி தாமோதரன், தமிழ் பேராசிரியர் முனைவர் வி.சரளா தாமோதரன், பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் உட்பட முக்கிய பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us