காங்கிரஸ் 'மாஜி' கவுன்சிலர் கோலாரை விட்டு வெளியேற்றம்
காங்கிரஸ் 'மாஜி' கவுன்சிலர் கோலாரை விட்டு வெளியேற்றம்
ADDED : மே 03, 2026 11:34 PM

அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயல் போலீசார் கூறியதாவது:
ஆண்டர்சன் பேட்டை, லுார்து நகரைச் சேர்ந்தவர் ஸ்டேன்லி, 65. காங்., முன்னாள் கவுன்சிலரான இவர் மீது 3 கொலை முயற்சி வழக்குகள், கொள்ளை, வீடுபுகுந்து திருட்டு, மோசடி உட்பட 9 வழக்குகள் இருந்தன.
2018ல் நடந்த கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 2,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இவர், ஆண்டர்சன் பேட்டை மார்க்கெட்டில் தொடர்ந்து பலருக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததால், அவரை கலபுரகி மாவட்டம், ஆனந்த் போலீஸ் நிலைய வட்டாரத்தில் இருக்கும்படி கூறி, போலீசார் வெளியேற்றினர். 'இந்த உத்தரவை மீறினால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்' எனவும், எச்சரித்துள்ளனர்.
