Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திருமணமான மறுநாளே மணமகன் உயிரிழப்பு

 திருமணமான மறுநாளே மணமகன் உயிரிழப்பு

 திருமணமான மறுநாளே மணமகன் உயிரிழப்பு

 திருமணமான மறுநாளே மணமகன் உயிரிழப்பு

ADDED : டிச 04, 2025 05:41 AM


Google News
விஜயநகரா: திருமணமான மறுநாளே, மணமகன் மாரடைப்புக்கு பலியானார்.

ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவின், ஹனுமந்தபுரா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், 30. இவர் தன் பெற்றோர் காலமான பின், விஜயநகரா மாவட்டம், ஹரப்பனஹள்ளி தாலுகாவின், ஹொசகொப்பலு கிராமத்தில் உள்ள, தன் தாய்க்கு சொந்தமான பூர்வீக வீட்டில் வசித்து வந்தார்.

இவருக்கு, ஷிவமொக்காவின், பன்ட்ரி கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன், நவம்பர் 30ல் திருமணம் நடந்தது. பி.ஹெச்.சாலையில் உள்ள கங்கா பிரியா திருமண மண்டபத்தில், ஆடம்பரமாக திருமணம் நடந்தது. டிசம்பர் 1ம் தேதி, மணமகளின் வீட்டுக்கு தம்பதி வந்தனர். கோவிலில் இருந்து மணமகளின் வீட்டுக்கு, ஊர்வலமாக மணமக்கள் அழைத்து வரப்பட்டனர்.

வீட்டில் பூஜை நடந்தது. மணமகன் ரமேஷ் பூஜை அறைக்கு செல்லும் போது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தார். திருமணமான மறுநாளே, மணமகன் இறந்த சம்பவம், கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us