/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை ஏராளமான கிராமங்கள் துண்டிப்பு மங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை ஏராளமான கிராமங்கள் துண்டிப்பு
மங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை ஏராளமான கிராமங்கள் துண்டிப்பு
மங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை ஏராளமான கிராமங்கள் துண்டிப்பு
மங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை ஏராளமான கிராமங்கள் துண்டிப்பு

மீட்பு
ஆனால் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் நேற்று காலையில் இருந்தே நல்ல மழை பெய்தது. குறிப்பாக மங்களூரு நகரில் கனமழை கொட்டி தீர்த்தது. நீர்மார்க்கம், பாலா, எக்கூரு, பஜ்பே, சிர்தாடி, அபகாரி பவன், படுமர்நாடு, சூரத்கல், கொடியாலுகுத்து, அட்டவாரா, பம்ப்வெல், சூரத்கல், பீகரனகட்டே, கைகம்பா உட்பட நகர் முழுதும் மழை வெளுத்து வாங்கியது.
நிலச்சரிவு
பம்ப்வெல் சதுக்கத்தில் பெய்த கனமழையால், மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தத்தளித்தப்படி சென்றன. பம்ப்வெல் சதுக்கத்தில் இருந்து செல்லும் சாலை, கேரளாவின் காசர்கோடு, கோழிக்கோடுவிற்கு பிரதான பாதை என்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கு
வடமாவட்டமான பாகல்கோட் ஹுன்குந்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலங்கள் மூழ்கின. நேற்று காலை ராம்வதகி என்ற கிராமத்தில் இருந்து கார்டி என்ற ஊருக்கு செல்ல அரசு பஸ் நடுவழியில், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. டிராக்டர் மூலம் பஸ் வெளியே இழுக்கப்பட்டது.