தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பகலில் பாதயாத்திரை ஐ.ஜி.பி., அறிவுறுத்தல்

 பகலில் பாதயாத்திரை ஐ.ஜி.பி., அறிவுறுத்தல்

 பகலில் பாதயாத்திரை ஐ.ஜி.பி., அறிவுறுத்தல்


ADDED : பிப் 12, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: தெற்கு மண்டல ஐ.ஜி.பி., போரலிங்கைய்யா நேற்று அளித்த பேட்டி:

சிறுத்தை தாக்குதலுக்கு ஆளாகி, காயமடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தில்லாமல் தப்பினார். மஹாதேஸ்வரா மலைக்கு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், முடிந்த வரை, பகல் நேரத்தில் பாதயாத்திரை செல்வது நல்லது. ஏன் என்றால் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.

தனித்தனியாக செல்லாமல், கூட்டம், கூட்டமாக பாதயாத்திரை நடத்தினால், பாதுகாப்பாக இருக்கும். பக்தர்களின் பாதுகாப்புக்காக, வனம், வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள், ஊழியர்கள் அடங்கிய 18 குழுக்கள் அமைத்துள்ளோம். பக்தர்கள் பாதயாத்திரை நடத்தும் இடங்களில், குழுவினர் பாதுகாப்பு அளிப்பர்.

ஆற்றை கடந்து செல்வோரின் பாதுகாப்புக்காக, நிர்ணயித்த இடங்களில், எஸ்.டி.ஆர்.எப்., குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆற்றை கடக்கும் போது, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் பாதைகளை, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். இரவில் ஓய்வு எடுத்து கொண்டு, பகலில் கூட்டமாக பாதயாத்திரை செல்லுங்கள்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us