/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உள் இட ஒதுக்கீடு கணக்கெடுப்பு 8 வரை நீட்டிப்பு உள் இட ஒதுக்கீடு கணக்கெடுப்பு 8 வரை நீட்டிப்பு
உள் இட ஒதுக்கீடு கணக்கெடுப்பு 8 வரை நீட்டிப்பு
உள் இட ஒதுக்கீடு கணக்கெடுப்பு 8 வரை நீட்டிப்பு
உள் இட ஒதுக்கீடு கணக்கெடுப்பு 8 வரை நீட்டிப்பு
ADDED : ஜூன் 03, 2025 01:54 AM
பெங்களூரு: கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் முடிந்து, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதில், எஸ்.சி., பிரிவில் உள்ள 101 உட்பிரிவுகள் குறித்த கணக்கெடுப்பு, மே 5ம் தேதி, நாக்மோகன்தாஸ் தலைமையில் மாநிலம் முழுதும் துவங்கியது. திடீரென பருவமழை பெய்ததால், பல இடங்களில் கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது. இதனால் மே 19 ம் தேதி முடிய வேண்டிய பணிகள், ஜூன் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இன்னும் பணிகள் முடியாததால், வரும் 8 ம் தேதி வரை, சிறப்பு முகாம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. எஸ்.சி., பிரிவின் உட்பிரிவை சேர்ந்தவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு, நாக்மோகன்தாஸ் தலைமையிலான கமிஷன் கேட்டு கொண்டு உள்ளது.