Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சித்தராமையா லிங்காயத் மதகுருவா? சலவாதி நாராயணசாமி கேள்வி

சித்தராமையா லிங்காயத் மதகுருவா? சலவாதி நாராயணசாமி கேள்வி

சித்தராமையா லிங்காயத் மதகுருவா? சலவாதி நாராயணசாமி கேள்வி

சித்தராமையா லிங்காயத் மதகுருவா? சலவாதி நாராயணசாமி கேள்வி

ADDED : அக் 08, 2025 08:13 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : “தனி மதம் விஷயத்தில், வீரசைவ - லிங்காயத்துகளுக்கு இல்லாத ஆர்வம், முதல்வர் சித்தராமையாவுக்கு ஏன்?,” என, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

வீர சைவ - லிங்காயத் சமுதாயத்தை, தனி மதமாக அறிவிப்பதற்கு, அந்த சமுதாயத்தின் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு இல்லாத ஆர்வம், முதல்வர் சித்தராமையாவுக்கு ஏன்? ஜாதிகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்த, சித்தராமையா முயற்சிக்கிறார். இவர் லிங்காயத் மத குருவா?

புத்த மதத்துக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதாக முதல்வர் கூறுகிறார். ஏற்கனவே மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அரசு, இட ஒதுக்கீடு அளித்துள்ளது. இப்போது மாநில அரசு இட ஒதுக்கீடு அளிப்பதாக கூறுகிறது. இதில் புதிதாக என்ன உள்ளது?

மத்திய அரசே, புத்த மதத்தினருக்கு ஆரம்பத்தில் இருந்தே, இட ஒதுக்கீடு சலுகை அளிக்கிறது. மாநில அரசு புதிதாக எதையும் செய்யவில்லை.

முந்தைய பா.ஜ., அரசு, எஸ்.டி., பிரிவுகளுக்கு 3 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை, 7 சதவீதமாக அதிகரித்தது. அப்போது சித்தராமையா, 'இதை நம்பாதீர்கள்' என்றார். அப்பிரிவினருக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு சலுகை கிடைக்கிறது. சித்தராமையா பொய் சொல்லவில்லையா?

ஜாதி வாரி சர்வேயில், குழப்பம் நிலவுகிறது. சர்வே ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட மென்பொருள் செயல்படவில்லை. 60 கேள்விகளுக்கு பதில் அளிக்க, ஒரு மணி நேரமாகிறது. பெங்களூரில் சர்வே நடக்கவே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us