/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'காந்தாரா' கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: பஞ்சுருளி தெய்வத்தின் கோபம் காரணமா? 'காந்தாரா' கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: பஞ்சுருளி தெய்வத்தின் கோபம் காரணமா?
'காந்தாரா' கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: பஞ்சுருளி தெய்வத்தின் கோபம் காரணமா?
'காந்தாரா' கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: பஞ்சுருளி தெய்வத்தின் கோபம் காரணமா?
'காந்தாரா' கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: பஞ்சுருளி தெய்வத்தின் கோபம் காரணமா?
அசம்பாவிதம்
அடுத்து, 38 நாட்கள் இடைவெளியில், படக்குழுவில் மூவர் இறந்தனர். மே 6ம் தேதி, கொல்லுாரின் சவுபர்ணிகா ஆற்றில் நீச்சலடிக்க சென்ற இப்படத்தின் துணை நடிகர் கபில், நீரில் மூழ்கி உயிரிழந்தார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராகேஷ் பூஜாரி, மே 11ல், நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று நடமாடியபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தண்டித்தே தீரும்
பஞ்சுருளி என்பது பன்றியின் முகம் கொண்ட கடவுளாக பாவிக்கப்படுகிறது. பார்வதி தேவி செல்லமாக வளர்த்த பன்றிக்குட்டி, தோட்டத்தை அழித்ததால் சிவபெருமான் கொன்றதாகவும், இதனால் சிவபெருமான் மீது பார்வதி கோபம் கொண்டதாகவும், பார்வதியை மகிழ்விக்க இறந்த பன்றிக்குட்டியை உயிர்ப்பித்து மக்களை பாதுகாக்க, பூமிக்கு அனுப்பியதாகவும் மக்கள் நம்புகின்றனர்.
நேரம் சரியில்லை
இதுகுறித்து தட்சிண கன்னடா மாவட்ட ஆன்மிகவாதிகள் சிலர் கூறுகையில், 'பஞ்சுருளி தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுள் வேஷம் கட்டி ஆடுபவர்களுக்கு கூட, கொட்டகை அமைத்து தான் வேஷம் போடப்படுகிறது. வேஷம் போடும்போது கூட, கடவுளை யாரும் பார்க்க கூடாது என்ற நடைமுறை உள்ளது. காந்தாரா படத்தில் பஞ்சுருளி தெய்வகத்தின் சக்தியை வெளிக்காட்டினாலும், கடவுள் வேஷம் போட்டு ஆடும்போது, ஏதாவது தவறு செய்து இருக்கலாம். வழிபாட்டு முறையில் ஏதாவது மாற்றம் செய்து இருக்கலாம்.