தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 1ம் வகுப்புக்கு பாடம் நடத்த ஐ.டி., ஆசிரியர்கள் நியமனம்

 1ம் வகுப்புக்கு பாடம் நடத்த ஐ.டி., ஆசிரியர்கள் நியமனம்

 1ம் வகுப்புக்கு பாடம் நடத்த ஐ.டி., ஆசிரியர்கள் நியமனம்


ADDED : ஜூன் 10, 2026 10:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 10:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சிறார்களுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்தே, கம்ப்யூட்டர் கல்வி அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சிறார்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி அவசியம். இதை மனதில் கொண்டு, ஒன்றாம் வகுப்பில் இருந்தே, கம்ப்யூட்டர் கல்வியை துவக்க, மாநில அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.

இதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் இருந்தே, கர்நாடக பப்ளிக் பள்ளிகளுக்கு 2,500 ஐ.டி., ஆசிரியர்கள் நிரந்தரமாக நியமிக்கப்படுவர். தேவைப்பட்டால், மற்ற பள்ளிகளுக்கும், ஐ.டி., ஆசிரியர்களை நியமிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக நியமன விதிமுறைகளில், திருத்தம் கொண்டு வரப்பட்டது.

தற்போது, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளை, பள்ளிகளுக்கு ஐ.டி., ஆசிரியர்களாக நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு, 44,425 முதல், 83,700 ரூபாய் வரை, ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us