/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வால்மீகி ஆணைய முறைகேடு ஜனார்த்தன ரெட்டி புது புகார் வால்மீகி ஆணைய முறைகேடு ஜனார்த்தன ரெட்டி புது புகார்
வால்மீகி ஆணைய முறைகேடு ஜனார்த்தன ரெட்டி புது புகார்
வால்மீகி ஆணைய முறைகேடு ஜனார்த்தன ரெட்டி புது புகார்
வால்மீகி ஆணைய முறைகேடு ஜனார்த்தன ரெட்டி புது புகார்
ADDED : ஜூன் 17, 2025 10:58 PM

கொப்பால்: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் நான்கு மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு தொடர்பு இருப்பதாக கங்காவதி எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி கூறி உள்ளார்.
கொப்பால் கங்காவதியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்தது மிகப்பெரிய முறைகேடு. இந்த முறைகேட்டில் ராய்ச்சூர், கொப்பால், பல்லாரி, விஜயநகர் மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் அனைவரும் நிதியை தவறாக பயன்படுத்தி, அரசு பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்துள்ளனர்.
இதனால் அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை நடத்துகிறது. ஆதாரமின்றி யார் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்த செல்ல மாட்டார்கள். அனைத்து தகவலையும் சேகரித்த பின் தான் சோதனை நடத்துகின்றனர்.
சமீபத்தில் பல்லாரி காங்கிரஸ் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் நடத்திய சோதனையில், அமலாக்கத்துறை சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். ஆனால் இந்த சோதனைக்கு பா.ஜ., மீது பழி சுமத்துகின்றனர்.
சிறிது காலம் எனக்கு துன்பத்தை கொடுத்து, எதிரிகளுக்கு சந்தோஷத்தை கடவுள் கொடுத்தார். ஜனார்த்தன ரெட்டி சிறையில் இருந்து வெளியே வர மாட்டார். கங்காவதியில் நடக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம் என்று சிலர், புதிதாக வெள்ளை ஆடைகளை தைத்துக் கொண்டு இருந்தனர்.
ஆனால், என் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதன் மூலம், அரசியல் எதிரிகள் ஆசை பகல் கனவாகிவிட்டது. நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து, என் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாயில் நான் மேற்கொள்ள இருந்த பணிகள் முடங்கி உள்ளன.
அந்த பணிகளை துவங்குவது குறித்து கலெக்டர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.