Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறந்த தமிழ் நுால்களுக்கு பரிசு பத்திரிகையாளர் சங்கம் அறிவிப்பு

சிறந்த தமிழ் நுால்களுக்கு பரிசு பத்திரிகையாளர் சங்கம் அறிவிப்பு

சிறந்த தமிழ் நுால்களுக்கு பரிசு பத்திரிகையாளர் சங்கம் அறிவிப்பு

சிறந்த தமிழ் நுால்களுக்கு பரிசு பத்திரிகையாளர் சங்கம் அறிவிப்பு

ADDED : அக் 11, 2025 11:03 PM


Google News
சிவாஜிநகர்: கர்நாடகத் தமிழ்ப் பத் திரிகையாளர் சங்கத்தின் நான்காம் ஆண்டு புத்தக திருவிழாவை முன்னிட்டு, சிறந்த தமிழ் நுால்களுக்கான பரிசு போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், நான்காம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழாவை, டிசம்பர் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை, தினமும் காலை 10.00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள 'தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ்' கட்டடத்தில் நடத்த உள்ளது.

இதை முன்னிட்டு, சிறந்த தமிழ் நுால்களுக்கான பரிசு போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது. எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை ஊக்குவித்து நல்ல நுால்களை தமிழர்களுக்கு அடையாளம் காட்டும் இப்போட்டியில் பங்கேற்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த புத்தகங்கள் 2024 நவம்பர் 1 முதல் அக்டோபர் 31, 2025க்குள் வெளியானவையாக இருக்க வேண்டும். புத்தகங்களை அனுப்ப, நவம்பர் 15ம் தேதி கடைசி நாளாகும். போட்டியில் பங்கேற்க, 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

கர்நாடகா, கர்நாடகா அல்லாதவை ஆகிய இரு பிரிவுகளில், தலா ஐந்து சிறந்த தமிழ் நுால்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு 5,000, 2வது பரிசு 3,000, 3வது பரிசு 2,000, ஆறுதல் பரிசாக ஐந்து பேருக்கு தலா 1,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படாத நுால்கள் மற்றும் பதிவு கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. இது குறித்த மேலும் விபரங்களுக்கு 63631 18988 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம். tamilbookfestivalblr@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இக்கண்காட்சியில், பல பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம் பெறும். தினமும் பேச்சு, கவிதை, கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், கர்நாடகா தமிழ் விருதுகள் வழங்கப்படும் என, சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us