/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடகா ராஜ் பவன் 'லோக் பவன்' ஆனது கர்நாடகா ராஜ் பவன் 'லோக் பவன்' ஆனது
கர்நாடகா ராஜ் பவன் 'லோக் பவன்' ஆனது
கர்நாடகா ராஜ் பவன் 'லோக் பவன்' ஆனது
கர்நாடகா ராஜ் பவன் 'லோக் பவன்' ஆனது
ADDED : டிச 04, 2025 05:44 AM
பெங்களூரு: கர்நாடக கவர்னர் மாளிகையான ராஜ் பவன், 'லோக் பவன், கர்நாடகா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கவர்னரின் செயலர் பிரபு சங்கர், மாநில தலைமை செயலர் ஷாலினிக்கு எழுதிய கடிதம்:
மக்களை மையமாகக் கொண்ட ஜனநாயகத்தின் நெறிமுறைகளை வலுப்படுத்தும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க செயலாக, 'ராஜ் பவன், கர்நாடகா' உடனடியாக 'லோக் பவன், கர்நாடகா' என மறு பெயரிடப்படுகிறது.
எனவே, மாநிலத்தின் அனைத்து துறை தலைமை அதிகாரிகளுக்கும், ராஜ் பவன், கர்நாடகா என்பதற்கு பதிலாக, லோக் பவன், கர்நாடகா என குறிப்பிட வேண்டும் என்ற அறிவுறுத்துங்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.


