ADDED : செப் 25, 2025 06:50 AM

பெங்களூரு: மூத்த இலக்கியவாதி பைரப்பா, நேற்று காலமானார்.
ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணாவின், சந்தேஷிவரா கிராமத்தில் வசித்தவர் பைரப்பா, 95. ஏராளமான படைப்புகளுக்கு சொந்தக்காரர். மொத்தம் 21 நாவல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் வம்ச விருக்ஷா, தப்பலியு நீநாதே மகனே, மத தானா ஆகிய நாவல்கள் திரைப்படமாக வெளியாகின.
இலக்கிய சாதனைக்காக, இவருக்கு'சரஸ்வதி சம்மான்' , 'பத்ம பூஷண்' விருதுகள் கிடைத்துள்ளன. இவரது படைப்புகள், மராத்தி, குஜராத்தி உட்பட, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
மைசூரில் வசித்த பைரப்பா, சமீப நாட்களாக உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டார். பெங்களூரின் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். நாளை பைரப்பாவின் சொந்த கிராமத்தில், இறுதிச் சடங்குகள் நடக்கும்.
இவரது ம றைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சித்தராமையா உட்பட, பலர் இரங்கல் தெரிவித்தனர். முழு அரசு மரியாதைகளுடன், அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது.