Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மதுரையில் மஹா பெரியவர்' கோவில்! திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்

'மதுரையில் மஹா பெரியவர்' கோவில்! திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்

'மதுரையில் மஹா பெரியவர்' கோவில்! திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்

'மதுரையில் மஹா பெரியவர்' கோவில்! திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்

ADDED : செப் 30, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
த மிழகத்தில் மதுரையை தவிர்த்து விட்டு, புண்ணியத் திருத்தலங்களைப் பட்டியலிட இயலாது. மகாவிஷ்ணு நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் 'கள்ளழகனாக' குடி கொண்டிருக்கும் 108 திருப்பதிகளில் ஒன்று கள்ளழகர் திருக்கோவில். அக்கோயிலுக்கான தெப்பக்குளம் அமைந்துள்ள எழில் மிகுந்த பொய்கை கரைப்பட்டயில், கள்ளழகர் மலை அடிவாரத்தில் 'ஜகத்குரு' காஞ்சி ஸ்ரீ மகா பெரியவருக்கு பெரிய தனிக்கோயில் ஒன்றைக் கட்டுகிறது, 'அனுஷத்தின் அனுக்கிரகம்' டிரஸ்ட்.

இதுகுறித்து பேசிய அதன் நிறுவனர் நெல்லை பாலு, ''மகா பெரியவா என பக்தர்களால் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பொய்கைக் கரைப்பட்டியில் கோயில் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளன. மார்ச் 6ம் தேதி வாஸ்து, பூர்வாங்க பூஜைகள் முடிக்கப்பட்டு, அரசின் தடையில்லா சான்று உட்பட அனுமதிகள் பெறப்பட்டுள்ளன.

செப்டம்பர் 7ம் தேதி ஆவணி பவுர்ணமியன்று, 11 வேத விற்பன்னர்களுடன் பூமி நிர்மாண ஸ்தாபிதம், தேவதா பிரார்த்தனை, மஹன்யாசம், ருத்ர பாராயணம், அர்ச்சனை, விசேஷ ஹோமம், பூஜை மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கியுள்ளன.

''முழுக்க முழுக்க ஸ்ரீ மகா பெரியவரின் அனுக்கிரகம் பெற்ற பக்தர்களின் பங்களிப்பானால் மட்டுமே கோயில் திருப்பணிகள் பூர்த்தி பெறும். பக்தர்களின் கைங்கரியத்தால் இடம் வாங்கி, மின் இணைப்பு, குடிநீர் ஆழ் குழாய் போடப்பட்டு, வானம் தோண்டி அஸ்திவாரப் பணிகள் நடந்து வருகின்றன.

திருப்பணி செலவுகள் பல லட்ச ரூபாயை தாண்டுவதால், ஒரு சதுர அடிக்கு 3,500 ரூபாய் வீதம் மகா பெரியவர் பக்தர்கள் நன்கொடை வழங்கலாம். ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் வழங்குவோரின் பெயர்கள் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட உள்ளன.

'' மேலும் விபரங்களுக்கு 94426 30815 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us