Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாமுண்டி மலையில் மகர ரத உத்சவம்

சாமுண்டி மலையில் மகர ரத உத்சவம்

சாமுண்டி மலையில் மகர ரத உத்சவம்

சாமுண்டி மலையில் மகர ரத உத்சவம்

ADDED : அக் 07, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
மைசூரு: சாமுண்டி மலையில் மகர ரத உத்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

மைசூரு தசரா விழாவையொட்டி, சாமுண்டி மலையில் நேற்று மகர ரத உத்சவம் விமரிசையாக நடந்தது. மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி, யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், அவரது மனைவி திரிஷிகா குமாரி வருகை தந்தனர்.

மூலவர் சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க உற்சவர், கோவிலுக்கு வெளியே எடுத்து வரப்பட்டது. தேரில் உற்சவர் வைக்கப்பட்டது. ரத உத்சவத்தை பிரமோதா தேவி துவக்கி வைத்தார். அப்போது, தேர் பவனி துவங்குவதற்கு 21 பீரங்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன.

இசைக்கருவிகள் ஒலி, வாண வேடிக்கையுடன் ஊர்வலம் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரின் மீது வாழைப்பழம், அரிசியை வீசி பிரார்த்தனை செய்தனர்.

பா.ஜ., - எம்.பி., யதுவீர் கூறுகையில், ''பாரம்பரிய முறைப்படி விஜயதசமிக்கு பின் ரத உத்சவம் நடந்து வருகிறது. மாநிலத்தில் மழை பெய்ய வேண்டும், மக்கள் நலமுடன் வாழ வேண்டுமென பிரார்த்தனை செய்தேன்,'' என்றார்.

தேர் பவனி வரும்போது, பக்தர்கள் தேரின் மீது வாழைப் பழங்களை வீசி பிரார்த்தித்தனர். பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us