Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மெட்ரோ கட்டணம் உயர்வு பயணியர் எண்ணிக்கை சரிவு

மெட்ரோ கட்டணம் உயர்வு பயணியர் எண்ணிக்கை சரிவு

மெட்ரோ கட்டணம் உயர்வு பயணியர் எண்ணிக்கை சரிவு


ADDED : பிப் 13, 2025 05:20 AM

Follow on Google

ADDED : பிப் 13, 2025 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட பின், பயணியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது பெங்களூரு மெட்ரோ நிறுவனத்துக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டுக்குப் பின், முதன் முறையாக பெங்களூரு மெட்ரோ நிறுவனம், ரயில் கட்டணத்தை 46 சதவீதம் உயர்த்தியுள்ளது.

கட்டண உயர்வால் அன்றாட பயணியர், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, புகார்கள் வந்துள்ளன. கட்டண உயர்வுக்குப் பின், மெட்ரோ ரயில்களில் பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பிப்ரவரி 9ம் தேதி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. மறுநாள் 10ம் தேதி, 8,28,149 பேரும், 11ம் தேதி 7,78,774 பேரும் பயணித்தனர். மற்ற நாட்களுடன் ஒப்பிட்டால், பயணியர் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்துள்ளது.

கட்டண உயர்வால், தினமும் 55.60 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பயணியர் எண்ணிக்கை குறைவதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வருவாய் குறையும் என, அஞ்சுகின்றனர்.

இதற்கிடையே, மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்கும்படி, எதிர்க்கட்சியினரும், பயணியரும் நெருக்கடி கொடுக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap