Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆபாசமாக பேசிய மர்ம நபர்: ஆடியோ வெளியிட்ட பிரியங்க்

ஆபாசமாக பேசிய மர்ம நபர்: ஆடியோ வெளியிட்ட பிரியங்க்

ஆபாசமாக பேசிய மர்ம நபர்: ஆடியோ வெளியிட்ட பிரியங்க்

ஆபாசமாக பேசிய மர்ம நபர்: ஆடியோ வெளியிட்ட பிரியங்க்

ADDED : அக் 16, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., பெயரை பயன்படுத்தி, மர்ம நபர் தன்னிடம் ஆபாசமாக பேசியதை, அமைச்சர் பிரியங்க் கார்கே வெளியிட்டுள்ளார்.

கர்நாடக தகவல் தொழில்நு ட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே. இவர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் ஆவார். அரசு, பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். இதனால் அவர் மீது பா.ஜ., தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு தடை குறித்து பேசுவதால், தனக்கு வெளிநாடுகளில் இருந்து மிரட்டல் அழைப்பு வருவதாக, பிரியங்க் கார்கே கூறி இருந்தார். அவரது கருத்தை பா.ஜ.,வினர் ஏற்கவில்லை. சிறுபிள்ளைத்தனமாக பேசுவதாக கிண்டல் செய்ததுடன், ஆவணம் இருந்தால் வெளியிடும்படி சவால் விடுத்தனர்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., பெயரில் மர்ம நபர் ஒருவர், தன்னிடம் ஹிந்தியில் ஆபாசமாக பேசிய, மொபைல் போன் உரையாடலை, பிரியங்க் கார்கே வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:

பா.ஜ., தலைவர்கள் கேட்ட ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். இனி என்ன செய்வது என்று அவர்கள் முடிவு எடுக்கட்டும். தத்துவம், சித்தாந்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறேன். என்னிடம் இன்னும் 30 முதல் 35 வீடியோ ஆதாரம் உள்ளது.

அதில் என்னை இன்னும் மோசமாக திட்டி உள்ளனர். என்னை திட்டியவர்களை சிறையில் தள்ளினால் என்ன பிரயோஜனம்? அவர்கள் மனதில் தீய விதையை விதைத்து உள்ளவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், பிரியங்க் கார்கே வீட்டின் முன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், பா.ஜ.,வினர் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்ப தால், சதாசிவநகரில் உள்ள அவரது வீடு, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்திற்கு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us