ADDED : டிச 03, 2025 06:38 AM

தங்கவயல்: தங்கவயல் பெமல் தொழிற்சாலையில் நேற்று நடந்த துாய்மை தினம் நிகழ்ச்சியில், பெமல் தொழிற்சாலையின் மனித வளத்துறை அதிகாரி நீனா சிங், மகாத்மா காந்தி படத்திற்கு மலர் துாவினார்.
பின் அவர் கூறுகையில், ''நாமும், நம்மை சுற்றி இருப்பவர்களும், வருங்கால தலைமுறையினரும் துாய்மையை கடைப்பிடிக்க வேண்டும். துாய்மை மட்டுமே நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்,'' என்றார்.
தலைமை அதிகாரி யோகானந்த், அதிகாரிகள் சங்கத் தலைவர் சுப்பிரமணி, தொழிலாளர் சங்கத் தலைவர் ராமச்சந்திர ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர். பெமல் காம்பிளக்ஸ் பகுதியில் துாய்மை பணி மேற் கொண்டனர்.


