/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'பிரதாப் சிம்ஹா சிடி விரைவில் வெளியாகும்' 'பிரதாப் சிம்ஹா சிடி விரைவில் வெளியாகும்'
'பிரதாப் சிம்ஹா சிடி விரைவில் வெளியாகும்'
'பிரதாப் சிம்ஹா சிடி விரைவில் வெளியாகும்'
'பிரதாப் சிம்ஹா சிடி விரைவில் வெளியாகும்'
ADDED : செப் 23, 2025 11:48 PM

மைசூரு : “பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹாவின் லீலைகள் குறித்த, 'சிடி'க்களை ஒவ்வொன்றாக வெளியிடுவேன்,” என, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமணன் கூறி உள்ளார்.
பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, கர்நாடக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமணனின் மனைவி, மகள் குறித்து அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மைசூரில் லட்சுமணன் அளித்த பேட்டி:
நான் அரசியல் ரீதியாக மட்டுமே பிரதாப் சிம்ஹா குறித்து பேசினேன். அவரது மனைவி, குடும்பம் குறித்து எப்போதும் பேசவில்லை. பிரதாப்பின் லீலைகள் குறித்த, 'சிடி' என்னிடம் உள்ளது. அவரது லீலை வீடியோக்கள் அனைத்தையும் மொபைலிலும் வைத்துள்ளேன். அவரது, 'சிடி'க்கள் ஒவ்வொன்றாக, 'எபிசோட்' வாரியாக வெளியிடப்படும்.
அதுபோல பிரதாப் மனைவி பா.ஜ., தேசிய பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷுக்கு எழுதிய கடிதம் என்னிடம் உள்ளது. அதில், தன் மனைவிக்கு பிரதாப் எவ்வளவு தொல்லை கொடுத்துள்ளார் என தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
குடித்துவிட்டு செய்யும் சேட்டைகள், பல பெண்களுடன் உள்ள தொடர்பு, பைத்தியம் போல நடந்து கொள்வது குறித்தும் முழுமையாக கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை பார்த்து பா.ஜ., மேலிடமே அதிர்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.