/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுத்தைக்கு பயந்து ஓடிய கர்ப்பிணி வரிக்குதிரை மரணம் சிறுத்தைக்கு பயந்து ஓடிய கர்ப்பிணி வரிக்குதிரை மரணம்
சிறுத்தைக்கு பயந்து ஓடிய கர்ப்பிணி வரிக்குதிரை மரணம்
சிறுத்தைக்கு பயந்து ஓடிய கர்ப்பிணி வரிக்குதிரை மரணம்
சிறுத்தைக்கு பயந்து ஓடிய கர்ப்பிணி வரிக்குதிரை மரணம்
ADDED : ஜூன் 11, 2025 11:41 PM

பெங்களூரு: பன்னரகட்டா உயிரியல் பூங்காவில், சிறுத்தை நடமாட்டத்தை பார்த்து பயத்தில் ஓடிய கர்ப்பிணி வரிக்குதிரை, இரும்பு தடுப்பு வேலியில் மோதி உயிரிழந்தது.
இது தொடர்பாக, பன்னரகட்டா உயிரியல் பூங்கா செயல் இயக்குநர் சூர்யா சென் கூறியதாவது:
பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில், இரண்டு ஆண், ஏழு பெண் வரிக்குதிரைகள் உள்ளன. இவற்றில், 'காவ்யா' என்ற வரிக்குதிரை, கர்ப்பமாக இருந்தது. இன்னும் சில நாட்களில் குட்டி போடும் நிலையில் இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை, இப்பகுதியில் சுற்றித்திரிந்தது. இதை பார்த்த 'காவ்யா' பயத்துடன் சுற்றித்திரிந்தது.
நேற்று முன்தினமும், சிறுத்தை நடமாட்டத்தை பார்த்த வரிக்குதிரை, பயத்தில் அங்கும், இங்கும் ஓடியது. ஓடும் போது, வரிக்குதிரை இருக்கும் பகுதிக்கும், மற்ற விலங்குகள் இருக்கும் பகுதிக்கும் இடையே போடப்பட்டிருந்த இரும்பு வேலி தடுப்பு மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் அதே இடத்தில் வரிக்குதிரை உயிரிழந்தது.
பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமராவில், சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்துள்ளோம். இதை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பன்னரகட்டா சுற்றுப்புற பகுதிகளில் பல நாட்களாக சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் அருகிலுள்ள கிராமங்களுக்குள் சிறுத்தைகள் சுற்றித் திரிந்து வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
� சிறுத்தைக்கு பயந்து இரும்பு தடுப்பு வேலியில் மோதி உயிரிழந்த வரிக்குதிரை. � கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தை.