/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சொத்து குவிப்பு வழக்கில் ஓய்வு அலுவலருக்கு சிறை சொத்து குவிப்பு வழக்கில் ஓய்வு அலுவலருக்கு சிறை
சொத்து குவிப்பு வழக்கில் ஓய்வு அலுவலருக்கு சிறை
சொத்து குவிப்பு வழக்கில் ஓய்வு அலுவலருக்கு சிறை
சொத்து குவிப்பு வழக்கில் ஓய்வு அலுவலருக்கு சிறை
ADDED : மே 27, 2025 12:12 AM
சிக்கபல்லாபூர்: வருவாய்க்கும் அதிகமாக சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கில், ஓய்வு பெற்ற 'டி குரூப்' ஊழியருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சிக்கபல்லாபூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிக்கபல்லாபூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றியவர் ஸ்ரீராமையா. இவர் தன் வருவாய்க்கும் அதிகமாக, சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 2014ல் இவரது வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆவணங்களை கைப்பற்றினர்.
ஆவணங்களை ஆய்வு செய்ததில், இவர் சட்டவிரோதமாக சொத்துகள் குவித்திருப்பது தெரிந்தது. அதன்பின் விசாரணையை முடித்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், சிக்கபல்லாபூர் மாவட்ட முதன்மை மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதற்கிடையில் ஸ்ரீராமையா, பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், ஸ்ரீராமையாவின் குற்றம் உறுதியானது. இவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்சம் அபராதமும் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அவர் சட்டவிரோதமாக சம்பாதித்த 1.35 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டது.


