Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வாழ்வின் ஒரு பகுதி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., - எம்.எல்.ஏ., நெகிழ்ச்சி

வாழ்வின் ஒரு பகுதி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., - எம்.எல்.ஏ., நெகிழ்ச்சி

வாழ்வின் ஒரு பகுதி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., - எம்.எல்.ஏ., நெகிழ்ச்சி

வாழ்வின் ஒரு பகுதி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., - எம்.எல்.ஏ., நெகிழ்ச்சி

ADDED : அக் 21, 2025 04:13 AM


Google News
Latest Tamil News
உடுப்பி: ''ஆர்.எஸ்.எஸ்., உடனான தன் தொடர்பு, விளம்பரத்துக்காக அல்ல. கலாசாரத்தின் ஒரு பகுதி,'' என கார்காலா பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் குமார் தெரிவித்தார்.

அவர் தன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டு உள்ளதாவது:

ஆர்.எஸ்.எஸ்., சங்கம், சீருடை ஆகியவை எங்களுக்கு பிரசார பொருட்கள் அல்ல. அவை ஒரு கலாசாரம், எங்கள் வாழ்வின் ஒரு பகுதி. 'ஸ்வயம்சேவக்' என்பது எங்கள் சங்கத்தால் வழங்கப்படும் ஒரு நிரந்தர சொத்து.

என் தந்தை வாசுதேவ், சங்கத்தின் தொண்டராக இருந்தார். சங்கத்தில் என்னை சேர்த்தவரும் அவர் தான். அதே போன்று என் மகனும் சங்கத்தின் தன்னார்வலராக உள்ளார். எங்கள் குடும்பத்தினர் போன்று நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்கள், தலைமுறை தலைமுறையாக தன்னார்வ தொண்டு செய்வதை பாரம்பரியமாகவும், மரபாகவும் பாதுகாத்து வருகின்றன. ஆனால் அதை பிரசாரத்துக்காக பயன்படுத்தும் எண்ணம் எங்களில் யாருக்கும் இல்லை.

அதிகாரம் என் தந்தையிடம் இருந்து எனக்கும், என்னிடம் இருந்து என் அடுத்து தலைமுறைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவன் நானல்ல.

உண்மையான தேசியவாதம் என்பது சங்கத்தின் கலாசாரம், பக்தி மற்றும் சேவையை அரசியலுக்கு மேலாக கருதும் மனப்பான்மை.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us