/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துப்புரவு பணியாளர்கள் தங்கவயலில் தர்ணா துப்புரவு பணியாளர்கள் தங்கவயலில் தர்ணா
துப்புரவு பணியாளர்கள் தங்கவயலில் தர்ணா
துப்புரவு பணியாளர்கள் தங்கவயலில் தர்ணா
துப்புரவு பணியாளர்கள் தங்கவயலில் தர்ணா
ADDED : ஜூன் 02, 2025 11:11 PM

தங்கவயல்: தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்கவயல் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள நகராட்சி வளாகத்தில் நேற்று தர்ணா செய்தனர்.
மாநில அரசு ஊழியர்களுக்குரிய சம்பளம் உட்பட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். 2022ல் தற்காலிக பணியாளர் பட்டியலில் சேர்ந்தவர்களுக்கு 15வது மாநில நிதி ஆணைய திட்டத்தில் இருந்து சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு, இலவச மருத்துவ சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா நடந்தது.
இதேபோல் முல்பாகல், கோலார் நகராட்சியிலும் துப்புரவு பணியாளர்கள் தர்ணா நடத்தினர். இதனால் நேற்று நகரில் குப்பை அள்ளப்படாமல் குவிந்து கிடந்தது.