Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசை விமர்சித்து அநீதி இழைக்கின்றனர் தொழிலதிபர்கள் மீது சிவகுமார் அதிருப்தி

அரசை விமர்சித்து அநீதி இழைக்கின்றனர் தொழிலதிபர்கள் மீது சிவகுமார் அதிருப்தி

அரசை விமர்சித்து அநீதி இழைக்கின்றனர் தொழிலதிபர்கள் மீது சிவகுமார் அதிருப்தி

அரசை விமர்சித்து அநீதி இழைக்கின்றனர் தொழிலதிபர்கள் மீது சிவகுமார் அதிருப்தி

ADDED : அக் 16, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ''எக்ஸ்' பக்கத்தில் விமர்சனம் செய்து, பெங்களூருக்கு தொழிலதிபர்கள் அநீதி இழைக்கின்றனர்,'' என, துணை முதல்வர் சிவகுமார் அதிருப்தி தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பெங்களூரில் நிலவும் பிரச்னை குறித்து, 'எக்ஸ்' பக்கத்தில் விமர்சனம் செய்வதன் மூலம், பெங்களூருக்கும், கர்நாடகாவுக்கும், சில தொழிலதிபர்கள் அநீதி இழைக்கின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் எங்கு இருந்தனர்.

விமர்சனம் செய்வோரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பு வழங்கி, அவர்களை பெரிய இடத்திற்கு உயர்த்தியது பெங்களூரு. இப்போது விமர்சிப்பவர்கள், அவர்களுக்கு அரசு என்னென்ன கொடுத்துள்ளது; எவ்வளவு உதவிகள் செய்துள்ளது என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் நாடு சாலைப் பள்ளங்களை மூடுவதற்கு, நாங்கள் அதிகபட்ச திறனுடன் பணியாற்றி வருகிறோம். கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு மிரட்டுவது உங்களுக்கு முக்கியம் என்றால் செய்து கொள்ளுங்கள். நான் யாரையும் கேள்வி கேட்கவோ, விமர்சனம் செய்யவோ மாட்டேன்.

பெங்களூரை, பிரதமர் மோடியே பாராட்டியுள்ளார். விமர்சனம் செய்வோர், பிரதமர் வார்த்தைக்கு மாறாக பேசுகின்றனர். அவர்களிடம் நான் என்ன சொல்ல முடியும்?

பெங்களூரில் இருந்து நிறைய பங்களிப்பை பெற்றவர்கள், தங்கள் சி.எஸ்.ஆர்., நிதியை என்ன செய்கின்றனர்? அவற்றை எங்கே செலவிடுகின்றனர்? சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கொடுப்பார்களா?

இது சீனாவோ அல்லது கம்யூனிஸ்ட் நாடோ இல்லை. ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். அரசு விரும்பும் நிலத்தை மேம்பாட்டுப் பணிகளுக்காக எடுத்துக் கொள்ள முடியாது. எல்லாவற்றிக்கும் ஒரு வரம்பு உள்ளது.

உள்கட்டமைப்பு, மனிதவளம், புதுமை, கண்டுபிடிப்பில் பெங்களூருக்கு இணையான நகரம் நாட்டில் வேறு எதுவும் இல்லை. மற்றவர்கள் தங்களை சந்தைப்படுத்த, பெங்களூரை பற்றிப் பேசுகின்றனர். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அதை தான் செய்கிறார்.

பெங்களூரில் 25 லட்சம் ஐ.டி., ஊழியர்களும், 2 லட்சம் வெளிநாட்டினரும் பணி செய்கின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு, பெங்களூரின் பங்களிப்பு மகத்தானது. மத்திய அரசின் வரி வருவாயில் 40 சதவீதம் இங்கிருந்து செல்கிறது. தங்கள் மாநிலத்தை சந்தைப்படுத்தும் நோக்கில், பெங்களூரை பற்றி குறைகூறி பேசுபவர்களுக்கு, மத்திய அரசு உதவினாலும், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us