Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முதல்வராக நீடிப்பேன் சித்தராமையா அதிரடி

முதல்வராக நீடிப்பேன் சித்தராமையா அதிரடி

முதல்வராக நீடிப்பேன் சித்தராமையா அதிரடி

முதல்வராக நீடிப்பேன் சித்தராமையா அதிரடி

ADDED : அக் 02, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
மைசூரு:'வரும் ஆண்டுகளிலும் தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தை துவக்கி வைப்பேன்' என்று கூறியதன் மூலம், முதல்வராக நீடிப்பேன் என்று சித்தராமையா சூசகமாக கூறி உள்ளார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநில அரசியலில் நவம்பரில் புரட்சி ஏற்படும் என்று எதிர்க்கட்சியினர் கூறுவதை நான் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டேன். அவர்கள் ஏதாவது சொல்லி கொண்டே இருப்பர். என் காரின் மீது காகம் அமர்ந்ததால், நான் முதல்வர் பதவியை இழப்பேன் என்று கூறினர். அப்படி நடக்கவில்லை. முதல்வர் பதவி விஷயத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். அவர்கள் முடிவே இறுதியானது.

வரும் ஆண்டுகளிலும் தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தை துவக்கி வைப்பேன் என்று, எனக்கு நம்பிக்கை உள்ளது. எழுத்தாளர் பானு முஷ்டாக் தசராவை துவக்கி வைக்க, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகா மதச்சார்பற்ற மாநிலம். அரசியலமைப்பு சட்டம் பற்றி தெரியாதவர்கள் தான் பிரச்னைகள் செய்கின்றனர். மத்திய அரசு அகவிலைப்படியை வழங்கிய பின், மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நவம்பரில் முதல்வர் மாற்றம் நடக்கும் என்று, எதிர்க்கட்சியினர் கூறி வரும் நிலையில், 'வரும் ஆண்டுகளிலும் தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தை துவக்கி வைப்பேன்' என்று கூறியதன் மூலம், நானே 5 ஆண்டுகளும் முதல்வர் என்று சித்தராமையா சூசகமாக கூறி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us