/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வனத்துறையினர் வாகனங்கள் மீது கல்வீச்சு வனத்துறையினர் வாகனங்கள் மீது கல்வீச்சு
வனத்துறையினர் வாகனங்கள் மீது கல்வீச்சு
வனத்துறையினர் வாகனங்கள் மீது கல்வீச்சு
வனத்துறையினர் வாகனங்கள் மீது கல்வீச்சு
ADDED : அக் 18, 2025 11:03 PM
மைசூரு: வனத்துறையினர் வாகனங்கள் மீது கிராம மக்கள் கல் வீசினர்.
மைசூரு, எச்.டி.கோட் தாலுகா, படகலபுரா கிராமத்தின் மாதேகவுடா, 50. விவசாயி.
இவர் நேற்று முன்தினம் தன் விவசாய நிலத்தில் வேலை செய்தார். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி, அவர் மீது பாய்ந்து அவரை தாக்கியது.
அங்கிருந்தோர் கூச்சல் போட்டதால், புலி வனப்பகுதிக்குள் ஓடியது. மாதேகவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூற, வனத்துறையினர் நேற்று காலை கிராமத்திற்குச் சென்றனர்.
கிராம மக்கள், வனத்துறை வாகனங்கள் மீது கல்வீசினர். வாகனங்களின் கண்ணாடி உடைந்தது. இதனால் வனத்துறையினர் திரும்பிச் சென்றனர்.


