/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் கோவில்கள் மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் கோவில்கள்
மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் கோவில்கள்
மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் கோவில்கள்
மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் கோவில்கள்
ADDED : செப் 24, 2025 11:06 PM

மைசூரு: பிரசித்தி பெற்ற லட்சுமி வரதராஜசுவாமி கோவில் மற்றும் ஹவுசிங் போர்டில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில், மின் அலங்காரத்தால் ஜொலிக்கின்றன.
விஜயதசமிக்கு மைசூரின் அனைத்து கோவில்களும் தயாராகின்றன. மைசூரு நகரின் வரதராஜ சுவாமி கோவில், ஹவுசிங் போர்டில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில்களுக்கு, ஏற்கனவே பெயின்ட் அடித்து திருப்பணிகள் நடந்தன.
தற்போது மின் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கோவில்கள் மட்டுமின்றி, சுற்றுப்பகுதி முக்கியமான சாலைகளும், மின் விளக்குகள் அலங்காரத்தால் ஜொலிக்கின்றன.
வரதராஜசுவாமி கோவிலின், வரதராஜசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளுக்கு, சாமுண்டீஸ்வரி கோவிலில் சாமுண்டீஸ்வரி சிலைக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. காலை, மாலையில் பூஜை, ஊஞ்சல் உற்சவம், கல்யாணோத்சவம் நடக்கிறது.
விஜயதசமி நாளன்று, இவ்விரு கோவில்களிலும் ஊர்வலம் நடக்கவுள்ளது.
கலைக்குழுக்கள், ஊர்திகள் பங்கேற்கவுள்ளன. இதை காண சுற்றுப்பகுதி மாவட்டங்களுடன், வெளி மாநிலங்களில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.