குடம் நிரம்புமா?
கோ ல்டு சிட்டிக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது பேத்தமங்களா ஏரி. இது, கடலா மாறியிருக்கு. ஆனாலும் அங்கு நிரம்புற நீர், கோல்டு சிட்டியின் வீடுகளில் உள்ள குடங்களில் எப்போ வந்து நிரம்புமோ. சுத்திகரிக்கப்பட்ட இந்த சுத்தமான ஏரி நீர், கோல்டு சிட்டிக்காகவே உருவானதாக 'கல்வெட்டு' அடையாளம் காட்டினாலும், அது வெறும் பாட்டி சொன்ன நிலாவில் வடை சுட்ட கதையாக தான் இருக்குது.
'நைனா'வுக்கு ஓய்வு?
சீ னியர்கள் கட்சி வேலையை கவனிக்கணுமாம். புதியவர்களுக்கு மந்திரி பதவி என கை கட்சி ஆட்சியில புது தகவலை பரப்பி வர்ராங்க. இதில, தேசிய அரசியலில் வேர் பிடித்த மூத்தவரான 77 வயதை தாண்டியவரிடம் உள்ள மந்திரி பதவியை பறிக்க போறாங்களாம். அவரை சமாதானப்படுத்த, அவரோட மகள மந்திரி ஆக்குறதா 'லிஸ்ட்' கசிந்திருக்கு.
தாமரை மலருமா?
கோ லார் மாவட்டத்தில் அடுத்த அசெம்பிளி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, '6 க்கு 6' திட்டத்தை வகுத்து வராங்க. இதில் ப.பேட்டைக்கு புல்லுக்கட்டு; கோல்டு சிட்டிக்கு தாமரை என உள் ஒப்பந்தம் செய்துக்குறாங்களாம். தாமரை -இரு முறை கோல்டு சிட்டி வசம் இருந்தது. பறிகொடுத்ததை மீட்க, 'மாஜி' செங்கோட்டைக்காரர் தான் சரியான 'அம்பு' என ஏவுவதற்கு தயாராக இருக்குறாங்க.
புது மாற்றம் தொடருமா?
த னி மரம் தோப்பு ஆகாது. அந்த ஒத்தை மரத்துக்கு, அதோட தெனாவட்டு தான் கம்பீரம். புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று தான் தனித்து செல்வாக்கு காட்டப்பட்டது. அதனால் தான் ஆல் பார்ட்டியே வேணாம்னு அசால்டா உதறி தள்ளியதை இதுவரை பார்க்க முடிந்தது.


