மார்க்கெட்டுக்கு ஆபத்து
கோ ல்டு சிட்டியில் 50 ஆயிரம் வீடுகள், 60 ஆயிரம் வாகனங்கள் இருக்குது. இது இல்லாமல் வெளியிடத்தில் இருந்து வரும் வாகனங்கள் 5,000 இருக்கலாம். இந்த வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால், ரா.பேட்டை எல்லா சாலைகளிலுமே நடைபாதைகளின் நிறுத்துமிடமாக மாறியிருக்கு.
யாருக்கு என்ன அதிகாரம்?
கோ ல்டு நகரின் முனிசி.,க்கு ஐந்து ஆண்டுகளுக்கான கவுன்சிலர்களை தேர்வு செய்ய 2019 நவம்பர் 12 ல் தேர்தல் நடந்தது. தலைவர், துணைத் தலைவர் பதவிக்காலம் தலா இரண்டரை ஆண்டுகள். முதல் கட்ட தலைவர் பதவிக்காலம் முழுசா இரண்டரை ஆண்டுகள் முடிந்துப்போனது. அடுத்தக் கட்ட இரண்டரை ஆண்டுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நடத்தாமல் ஒன்றரை வருஷம் வீணா போனது. பிறகு தான் தலைவர், து.த., பதவிக்கு தேர்தல் நடந்தது.
உஷாரய்யா... உஷாரு
வ டநாட்டுக் காரங்க மாநில முழுதும் வந்து குவிந்தவாறு இருக்காங்க. இதில் கோல்டு சிட்டியும் விதிவிலக்கல்ல. எல்லா தொழிலிலுமே அவங்களே இருக்காங்க. இவங்களுக்கு வேலை கொடுத்திருப்பவங்க மீது காக்கி காரங்க 'உஷார்' நடவடிக்கையாக இருக்கோணும். குறைந்த சம்பளத்தில் ஆள் கிடைப்பதால் ஆவணங்கள் இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொண்டு, பாதிப்பு ஏற்பட்டதும் குத்துது; குடையிதுன்னு எதுக்கு கலங்கி அல்லல் படணும்.
திட்டம்
மெத்தனம்
பே த்தமங்களாவில் இருந்து கோல்டு சிட்டிக்கு மறுபடியும் குடிநீர் கொண்டு வர 69 கோடி ரூபாய் அரசு நிதி வந்தது. 2017 ல் வேலையை துவக்கி 2019 ல் முடிப்பதாக ஒப்பந்தம் செய்தாங்க. ஆனா, குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கல. இதனால் 2022க்குள் முடிக்க அவகாசம் கொடுத்தாங்க. 2025 ம் முடியும் கட்டம் வந்தாச்சு. இந்த திட்டம் என்ன ஆனது.


