/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தியேட்டர் டிக்கெட் கட்டணம் வழக்கு ஒத்திவைப்பு தியேட்டர் டிக்கெட் கட்டணம் வழக்கு ஒத்திவைப்பு
தியேட்டர் டிக்கெட் கட்டணம் வழக்கு ஒத்திவைப்பு
தியேட்டர் டிக்கெட் கட்டணம் வழக்கு ஒத்திவைப்பு
தியேட்டர் டிக்கெட் கட்டணம் வழக்கு ஒத்திவைப்பு
ADDED : அக் 01, 2025 12:10 AM
பெங்களூரு : கர்நாடகாவில் மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஜி.எஸ்.டி., இல்லாமல் அதிகபட்சமாக 200 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு ஒரு நபர் நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 'தங்கள் விருப்பப்படி கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது' என, ஒரு நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து கர்நாடக திரைப்பட வர்த்தக சங்க த்தினர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று இரு நீதிபதிகள் அடங்கிய விடுமுறைகால அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஒரு நபர் நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து , '4 வாரத்திற்குள் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் பதிலளிக்க வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதிகள் மனு மீதான அடுத்த விசாரணையை நவ.,25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


