Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுமியிடம் தவறாக நடக்க  முயன்ற இரு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

சிறுமியிடம் தவறாக நடக்க  முயன்ற இரு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

சிறுமியிடம் தவறாக நடக்க  முயன்ற இரு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

சிறுமியிடம் தவறாக நடக்க  முயன்ற இரு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

ADDED : அக் 16, 2025 11:24 PM


Google News
தாவணகெரே: சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

தாவணகெரே மாவட்ட எஸ்.பி., உமா பிரசாந்த் கூறியதாவது:

தாவணகெரே மாவட்டம் ஆர்.எம்.சி., பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 9ம் தேதி இரவு, தன் வீட்டுக்கு மாவட்ட பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர், சிறுமியை ஆர்.எம்.சி., பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

பதற்றமடைந்த சிறுமி கூச்சலிடத் துவங்கினார். வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுமியிடம் ஆட்டோ ஓட்டுநர் தவறான முறையில் நடக்க முயற்சித்தார். சிறுமியிடம் இருந்து செல்போன், பணத்தை பறித்தார். இதற்குள் சிறுமி, தப்பி ஓடிவிட்டார்.

இது தொடர்பாக மாவட்ட மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர், இச்சம்பவதத்தில் தொடர்புடைய மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us