/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே மாதிரி ஆடை கட்டுப்பாடு அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே மாதிரி ஆடை கட்டுப்பாடு
அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே மாதிரி ஆடை கட்டுப்பாடு
அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே மாதிரி ஆடை கட்டுப்பாடு
அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே மாதிரி ஆடை கட்டுப்பாடு
ADDED : ஜூன் 18, 2025 11:18 PM
பெங்களூரு: கர்நாடகாவில் மாநில அரசு தேர்வுகளை கே.இ.ஏ., நடத்துகிறது. இது, ஒவ்வொரு தேர்வுக்கும் பல விதமான ஆடை கட்டுப்பாடுகளை வழங்கி வந்தது.
இதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். தேர்வுகளின்போது ஆடைக் கட்டுப்பாடு குறித்த பிரச்னைகளும் எழுந்தன.
இதைத் தவிர்க்க, அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே மாதிரியான ஆடைக் கட்டுப்பாடுகளை கே.இ.ஏ., வழங்கி உள்ளது. இது குறித்து, கே.இ.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரசு தேர்வுகளின்போது ஏற்படும் ஆடை கட்டுப்பாடு தொடர்பான குழப்பங்களை தவிர்க்க, அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே மாதிரியான விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன.
தேர்வு எழுதும் மாணவர்கள் முழுக்கை சட்டைகள், ஜிப் வைத்த பாக்கெட்டுகள், குர்தா, ஜீன்ஸ் பேன்ட், செயின், மோதிரம், நகை, காதணி, பிரேஸ்லெட் அணியக்கூடாது.
மாறாக, அரைக்கை சட்டைகள், காலர் இல்லாத சட்டைகள் அணிய வேண்டும். தேர்வு அறைக்குள் செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஷூ அணிந்து செல்லக்கூடாது.
அதே போல மாணவியர், வளையல்கள், கொலுசுகள் தவிர எந்த ஆபரணங்களையும் அணியக்கூடாது. முழுகை சட்டைகள், ஜீன்ஸ், பூக்கள், உயரமான ஹீல்ஸ், ஷூ அணிந்து வரக்கூடாது. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.