Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 2,500 ஆபாச வீடியோக்கள் ஆசிரியர் மீது மனைவி புகார்

2,500 ஆபாச வீடியோக்கள் ஆசிரியர் மீது மனைவி புகார்

2,500 ஆபாச வீடியோக்கள் ஆசிரியர் மீது மனைவி புகார்

2,500 ஆபாச வீடியோக்கள் ஆசிரியர் மீது மனைவி புகார்

ADDED : செப் 24, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
கோனனகுண்டே : ஆசிரியர் மீது மனைவி மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளார். கணவரின் மொபைல் போனில் 2,500 சிறுமியர், இளம்பெண்கள் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக 'பகீர்' தகவல் கூறி உள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் மேத்யூ, 33. பெங்களூரு கோனனகுண்டேயில் பல ஆண்டுகளாக வசிக்கிறார். தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், கிரிக் கெட் பயிற்சியாளராகவும் உள்ளார்.

தனியார் பள்ளியில் படிக்கும் 11 வயது சிறுமியின் தாய்க்கும், மேத்யூவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சிறுமியின் தாய், கணவரை விவாகரத்து செய்தவர். நான்கு மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்தை பதிவு செய்யவில்லை.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், மேத்யூவின் மொபைல் போனை அவரது மனைவி பார்த்தபோது, அதிர்ச்சி அடைந்தார்.

மொபைல் போனில் சிறுமியர், இளம்பெண்களின் 2,500 ஆபாச வீடியோக்கள், மேத்யூவும், சில பெண்களும் நிர்வாணமாக பேசும் 'வீடியோ கால் ஸ்கீரின் ஷாட்'களும் இருந்தன. ஆனாலும் இதுபற்றி மேத்யூவிடம் அவர் எதுவும் கேட்கவில்லை.

இந்நிலையில், அவர் கருவுற்றார். இதை அறிந்த மேத்யூ, நேற்று முன்தினம் இரவு மனைவியின் மொபைல் போனுடன் தலைமறைவானார். அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.

கர்ப்பமான பின் தன்னை கைவிட்டுச் சென்ற மேத்யூ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோனனகுண்டே போலீசில், பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். ஆனால், போலீசார் புகாரை ஏற்கவில்லை. இதனால் மகளிர் ஆணையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், 2,500 ஆபாச வீடியோக் கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us