தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாம்பார் விஷயத்தில் பெண் தற்கொலை

சாம்பார் விஷயத்தில் பெண் தற்கொலை

சாம்பார் விஷயத்தில் பெண் தற்கொலை


ADDED : ஜூன் 01, 2025 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2025 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவனஹள்ளி: பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவின், சாவகனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் நாகரத்னா, 38. இவருக்கு திருமணமாகி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

நேற்று முன் தினம் இரவு, நாகரத்னா சாம்பார் சமைத்திருந்தார். இது கணவருக்கு பிடிக்கவில்லை. இதனால் தம்பதிக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. நள்ளிரவு வரை சண்டை நீடித்தது.

நேற்று காலை நீண்ட நேரமாகியும், மனைவி வெளியே வராததால், அறைக்குள் சென்று கணவர் பார்த்துள்ளார். நாகரத்னா, துாக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அங்கு வந்த விஸ்வநாதபுரா போலீசார், நாகரத்னா உடலை மீட்டனர். இவர் தற்கொலை செய்ததாக, கணவரும், பிள்ளைகளும் கூறுகின்றனர். ஆனால் தங்களின் மகளை, மருமகனே கொலை செய்திருக்கலாம் என, சந்தேகம் தெரிவித்து நாகரத்னாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us